நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் குருக்குபுரம், பாரக்கல்புதூரில் எழுந்தருளியுள்ள இராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குலதெய்வம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் குருக்குபுரம், பாரக்கல்புதூரில் எழுந்தருளியுள்ள இராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குலதெய்வம்
கொங்கு நாடு, பண்டைய தமிழகத்தின் ஆறு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு என்பவை மற்றவையாகும். கொங்கு என்பதற்குத் தேன், நறுமணம், மகரந்தம், பொன், நீலக்கல், மலை, கரடு, பள்ளம் என்ற பல பொருள்கள் உண்டு. கொங்கு நாடு வடக்கில் பெரும் பாலையையும், தெற்கில் பழனி மலையையும், மேற்கில் வெள்ளையங்கிரியையும், கிழக்கில் குளித்தலையையும் எல்லைகளாகக் கொண்டு விளங்கியது.
கொங்கு நாடு சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்னரே தனி நாடாக இருந்துள்ளது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் எடுத்து விழா நடத்திய பொழுது கொங்கரும் கலந்து கொண்டார்.
திருச்செங்கோடு மலை, கொல்லி மலை, வைகைப் பொன்மலை, அலவாய் மலை, பழநி மலை, பொன்னூதி மலை, கொங்கணவர் மலை, சேர்வராயன் மலை, ஒதியூர் மலை, தலைமலை, வெண்ணை மலை, சென்னி மலை, கஞ்ச மலை, வெள்ளி மலை, ஆனை மலை ஆகியவை முக்கியமான மலைகளாகும்.
காவிரி, பவானி, நொய்யல், அமராவதி, திருமணி முத்தாறு, தொப்பையாறு, செய்யாறு, நள்ளாறு, சண்முகா நதி, பாலாறு, வாளையாறு, குடகனாறு, சிற்றாறு என்பவை முக்கிய நதிகளாகும்.
காவிரி, பவானி, நொய்யல், அமராவதி, திருமணிமுத்தாறு, தொப்பையாறு, சரபங்கா ஆறு ஆகிய முக்கிய ஆறுகள் கொங்கு நாட்டைச் செழிப்புற செய்தலால் கொங்கு நாடு ''எழுகரை நாடு என்றும் அழைக்கப்பட்டது.
கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு.
வ.எண் | தலம் | பாடியவர் |
---|---|---|
1 | திருச்செங்கோடு | திருஞானசம்பந்தர் |
2 | பவானி | திருஞானசம்பந்தர் |
3 | கரூர் | திருஞானசம்பந்தர் |
4 | அவிநாசி | சுந்தரர் |
5 | திருமுருகன் பூண்டி | சுந்தரர் |
6 | திருவெஞ்சமாக் கூடல் | சுந்தரர் |
7 | கொடுமுடி | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
"ஆதி கருவூர் அதிவெஞ்சமாங் கூடல் நீதன் கொடுமுடி மேல் - நீர் நணா – மேதினியில் நாதன் அவினாசி நன் முருகன் பூண்டி திருச்சோதிச் செங்கோடனவே சொல்" (பழம் பாடல் )
கொங்கு நாட்டில் வேளாண்மை செய்தவர்கள் "வேளாளர்" என்றும் சமூகத் தலைமையும் நாட்டதிகாரமும் பெற்ற வேளாளர்கள் "நாட்டு வேளாளர்" அல்லது "நாட்டுக் கவுண்டர்கள்" என்று அழைக்கப் பட்டனர். ஒரு ஊருக்கு தலைவராக இருப்பவர் "ஊர்க் கவுண்டர்" என்றும் பல ஊர்களைக் கொண்ட காணியாளத் தலைவரை "காணியாளக் கவுண்டர்" என்றும் பல காணிகைகளைக் கொண்ட நாட்டின் தலைவரை "நாட்டுக் கவுண்டர்" என்றும் அழைக்கப்பட்டனர். நாட்டுக் கவுண்டர்களின் வழியில் வந்த உறவினர்கள் அனைவரும் "நாட்டுக் கவுண்டர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் கொங்கு வேளாளர் குலங்களைச் சார்ந்தவர்களே ஆவர். கொங்கு நாட்டில் இராசிபுரம் நாடு, மல்லசமுத்திரம் நாடு, பருத்திப் பள்ளி நாடு, மோரூர் நாடு ,ஏளூர் நாடு ,மொளசி நாடு, திண்டமங்கலம் நாடு ஆகியவற்றில் சமூகத் தலைமை ஏற்று நாட்டதிகாரம்
அந்தந்த நாட்டின் நாட்டு வேளாளர் அல்லது நாட்டுக் கவுண்டர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண் G.O Ms. No. 98 dated 5.11.2009 பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வரிசை எண் 56 இல் கொங்கு வேளாளர் என்பதில் நாட்டுக் கவுண்டர் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது
வ.எண் | நாடு | குலம் | குல தெய்வம் |
---|---|---|---|
1 | இராசிபுரம் | விழியன் குலம் | அத்தனூர் பத்ரகாளி அம்மன் |
2 | மல்லசமுத்திரம் | விழியன் குலம் | மல்லசமுத்திரம் செல்லாண்டி அம்மன் |
3 | திண்டமங்கலம் | விழியன் குலம் | திண்டமங்கலம்செல்லாண்டி அம்மன் |
4 | பருத்திப்பள்ளி | செல்லன் குலம் | அழகு நாச்சியம்மன் |
5 | மோரூர் | கண்ண குலம் | நல்ல புள்ளி அம்மன் |
6 | மொளசி | கண்ண குலம் | இளைய பெருமாள் |
7 | வெண்ணந்தூர் | கண்ண குலம் | செல்லி அம்மன் |
8 | வீரபாண்டி | கண்ண குலம் | காரூர் அம்மன் |
9 | ஏழூர் | பண்ணை குலம் | பண்ணை அம்மன் |
10 | மாவுவெரட்டிப்பட்டி | கண்ண குலம் | செல்லாண்டி அம்மன் |
கொங்கு நாட்டுக் கவுண்டர்கள் தங்கள் இல்லத்திற்கு வரும் உறவினர்களையும், மற்றவர்களையும் இருகரம் கூப்பி வரவேற்பார்கள். அதிலும் வயது முதிர்ந்த பெண்கள் தங்கள் தலையை தாழ்த்தி கரங்களை கூப்பி தலையின் மேல் வைத்துத் வணங்குவார்கள். இதுவே "இராஜ மரியாதை" என்று அழைக்க இந்த வழக்கம் மற்ற எந்த இனத்திலும் இல்லை .
கொங்கு நாட்டுக் கவுண்டர்கள் குறிப்பிட்ட குலத்தில் தான் திருமண உறவு வைத்துக் கொள்வார்கள்.
பங்காளிகள் | மாமன், மைத்துனர்கள் |
---|---|
1. இராசிபுரம் விழியன் குலம் மல்ல சமுத்திரம் விழியன் குலம் திண்ட மங்கலம் விழியன் குலம் பருத்திப்பள்ளி செல்லன் குலம் |
மோரூர் கண்ண குலம் மொளசி கண்ண குலம் ஏளூர் பண்ணை குலம் வெண்ணந்தூர் கண்ண குலம் வீரபாண்டி மணியன் குலம் மாவுரெட்டிப்பட்டி கண்ண குலம். |
2. மோரூர் கண்ண குலம் மொளசி கண்ண குலம் வெண்ணந்தூர் கண்ண குலம் வீரபாண்டி மணியன் குலம் மாவுரெட்டிபட்டி கண்ண குலம் |
இராசிபுரம் விழியன் குலம் மல்லசமுத்திரம் விழியன் குலம் திண்டமங்கலம் விழியன் குலம் பருத்திப்பள்ளி செல்லன் குலம். ஏளூர் பண்ணை குலம் |
3. ஏளூர் பண்ணை குலம் | இராசிபுரம் விழியன் குலம் திண்டமங்கலம் விழியன் குலம் மோரூர் கண்ண குலம் மொளசி கண்ண குலம் வெண்ணந்தூர் கண்ண குலம் வீரபாண்டி மணியன் குலம் |
நாட்டுக் கவுண்டர்களின் ஒவ்வொரு குலத்திற்கும் குல குரு ஒருவர் உள்ளார். இராசிபுரம் நாடு விழியன் குலத்தாரின் குல குரு ஈரோட்டுக்கு அருகில் உள்ள பாசூர் மடம் ஆகும்.
இராசிபுரம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்றாகும். "இராசி" என்பதற்கு வளம், நன்மை , அதிர்ஷ்டம் என பல பொருள்கள் உண்டு.
இராசி என்பது இங்குள்ள மண் வளத்தை குறிப்பதாகும்.
இராசிபுரம் கிழக்கு மேற்புறம் ஏரிகளாலும் சுற்றிலும் மலைகளாலும் சூழப்பட்டதாகும். இராசிபுரம் நாற்கவி நாவலர் பொன்னுசாமி செட்டியார்
"மேற்கலை வாய் மலை மேலாம் கிழக்கினில்
போற்றுமுயர் கொல்லிமலை போதமலை - ஏற்றமிகு
தெற்கு நயினா மலை செந்தமிழ் இராசை நகர்
உற்ற மதில் எனவே ஓது"
என்று பாடியுள்ளார். மேற்கே அலவாய் மலை, கிழக்கே கொல்லிமலை வடக்கே போதமலை, தெற்கே நைனாமலை ஆகியவற்றை அரண்களாகக் கொண்டது.
இராசிபுரம் நாட்டைக் காரணியாகக் கொண்ட கொங்கு நாட்டுக் கவுண்டர்கள் "இராசிபுர நாடு விழியன் குலத்தார் என்று அழைக்கப்படுகின்றனர். 15 ஆம் நூற்றாண்டில் வெளியர் குலமென்று விழியன் குலம் அழைக்கப்பட்டுள்ளது. கொங்கு வேளாளர் குலங்களைக் கூறும் ஓதாளர் அழகுமலைக் குறவஞ்சி என்ற நூலில் "விழியன் குலம் "விளியன் குலம்" என்று கூறப்பட்டு உள்ளது
இராசிபுரம் நாடு விழியன் குலத்தில் பாச்சலூரான், செண்பகராயன், துலுக்கண்ணன், ஆலத்தூரான் என்ற நான்கு பிரிவுகள் உள்ளன. அத்தனூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் கொடிக் கம்பத்திற்கு அருகில் நான்கு கல் குதிரைகள் அம்மனை நோக்கி உள்ளன. அந்தக் குதிரைகள் மேற்கேயிருந்து கிழக்காகப் பாச்சலூரான், செண்பகராயன், துலுக்கண்ணன், ஆலத்தூரான் ஆகியோருடையதாகும். இக் குதிரைகளுக்குப் பூசை செய்த பின்னரே அம்மனுக்கு நாள் தோறும் பூசை நடைபெறுவது வழக்கம். திப்பு சுல்தான் குதிரைப் படையில் தளபதியாக இருந்த விழியன் குலத்தார் "ஆபோஜி" என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் "ஆவுச்சி" என்று அழைக்கப்பட்டனர்.
மேற்கோள்: இராசிபுரம் நாடு விழியன் குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் புத்தக வெளியீடு