img

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் குருக்குபுரம், பாரக்கல்புதூரில் எழுந்தருளியுள்ள   இராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குலதெய்வம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் குருக்குபுரம், பாரக்கல்புதூரில் எழுந்தருளியுள்ள   இராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குலதெய்வம்

img
img
புதிய கோவில் உருவான வரலாறு

ஆதியில் விழியன் குல வேளாளர்களின் குல தெய்வம் தற்போதைய திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பரஞ்சேர்வழி அருள்மிகு கரிய காளியம்மன் ஆறுகுலத்தாருக்கு குலதெய்வமாக விளங்கி வருகின்றது அதில் விழியன் குலத்தாரும் ஒருவர் ஆகும். விழியன் குலத் தலைவன் தித்தன் அகளங்கசோழன் அரசனிடம் தளபதியாக இருந்து கம்பண்ணனை சிறைப்பிடித்து கொண்டுவந்ததன் மூலம் இராசிபுரம் நாட்டதிகாரமும், புலிகொடியும் சமூகத் தலைமையும் பெற்றனர் . 1331-ம் ஆண்டு அத்தனூரில் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்கள் தங்கள் குல தெய்வமான அருள்மிகு அத்தனூர் அம்மனுக்கு கோவில் கட்டி குடமுழுக்கு செய்து வழிபட்டு நிர்வகித்து வந்தனர். 1930-1941 வரை பேளுக்குறிச்சி ஜமீன்தார் வேலப்பகவுண்டர் மற்றும் அவருடைய வாரிசுகளும், 1941 - 1965 வரை கவுண்டம்பாளையம் மிட்டாதாரர் வருதப்பக் கவுண்டர் மற்றும் அவருடைய வாரிசுகளும், 1966 – 1971 வரை A.P. சுப்பராய கவுண்டர் மற்றும் 1972-1988 வரை A.A. பழனிவேல் கவுண்டர்,ஆகியோர் அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவில் அறங்காவலர்களாக இருந்து நிர்வாகம் செய்தனர். 1976 ஆம் ஆண்டு அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. 1988 ஆம் ஆண்டு இராசிபுரம் நாடு விழியன் குலத்தைச் சார்ந்த நாட்டுக் கவுண்டர்கள் சார்பில் எவரும் அறங்காவலராக நியமனம் செய்யப்படவில்லை. அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவில் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டு கவுண்டர்களுக்கு பாத்தியப்பட்டது. நிர்வாகம் செம்மையாகவும் நடைபெற இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்களை மட்டும் அறங்காவலர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று நிர்வாக வரைவுத் திட்டம் (Scheme) அனுமதிக்க வழக்கு எண் 51/88 சேலம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. 1976 ஆம் ஆண்டு முதல் அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் சட்டம் 1959 இன் மாவட்ட கமிட்டி விதிகள் 1997 இன் படி மாவட்ட கமிட்டி சிபாரிசு செய்யும் நபர்களைத் தான் கோவில் அறங்காவலர்களாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரால் நியமனம் செய்யப்படுவார்கள். மாவட்ட கமிட்டி ஆளும் கட்சியால் அமைக்கப்படும். மாவட்ட கமிட்டி தங்கள் கட்சியைச் சார்ந்தவர்களைத் தான் அறங்காவலர்களாக நியமனத்திற்கு சிபாரிசு செய்யும். ஒருகோவிலுக்கு 3 நபர்களை அறங்காவலர்களாக நியமனம் செய்யலாம். அதில் ஒரு பெண் அறங்காவலராக இருக்க வேண்டும். மற்றொருவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். கோவிலில் கோடிக் கணக்கில் செலவு செய்து திருப்பணிகள் செய்தாலும் திருப்பணிகள் செய்யாதவர்கள் அறங்காவலராக வர முடியாது. வழக்கு எண் 51/88 நடைபெற்றதால் அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவிலுக்கு 1988 இலிருந்து இது வரையிலும் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

1984 ஆம் ஆண்டு திரு. அரூர் முத்துக் கவுண்டர் முன்னாள் எம்.பி அவர்களைக் கொண்ட "இராசிபுரம் விழியன் குல நாட்டுக் கவுண்டர் சங்கம்" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அவருக்குப் பின்னர் 1998 வரை திரு. குமரவேல் கவுண்டர் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர் திரு ஏ.ஈஸ்வரமூர்த்தி தலைவரானார். திரு. ஈஸ்வரமூர்த்தி மற்றும் 12 நபர்கள் சேர்ந்து 26.2.2001 அன்று "இராசிபுரம் நாடு விழியன் குலக் கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளை" என்ற பெயரில் விழியன் குலப் பங்காளிகளின் கருத்தை கேட்காமல் இராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். இந்த அறக்கட்டளைக்குத் திரு. ஏ.ஈஸ்வரமூர்த்தி மற்றும் 12 நபர்கள் தான் நிரந்தர பரம்பரை அறங்காவலர்கள் என்றும் அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள முதல் ஆண் வாரிசு நிரந்தர பரம்பரை அறங்காவலராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டிருந்தது. இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டு வேளாளர் ரூ.1,000/- செலுத்தி நிரந்தர உறுப்பினர் ஆகலாம் என்றும் இந்த உறுப்பினர்களில் 5 நபர்களை இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நிரந்தர அறங்காவலர்களால் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவிற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையைப் பற்றி பின்னால் தெரிந்து கொண்ட இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர் பங்காளிகள் எதிர்ப்பு தெரிவித்து இந்த அறக்கட்டளை விதிமுறைகளை மற்றும் நிரந்தர பரம்பரை வாரிசு உரிமை இருக்கக் கூடாது என்றும் அந்த அறக்கட்டளையின் சொத்துக்கள் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டு வேளாளர்கள் அனைவருக்கும் சொந்தம், யாருக்கும் தனிப்பட் முறையில் எந்த உரிமையயும் இல்லை , அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரும் சமம் என்று கூறி, பலத்த எதிர்ப்பு தெரிவித்து அறக்கட்டளையின் விதிகளையும் திருத்த வேண்டும் என்று கூறினர். அதன்படி 18.2.2003-ல் இராசிபுரம் ஜாகையில் இராசிபுரம் நாடு விழியன் குல கொங்கு நாட்டுக் கவுண்டர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அறக்கட்டளையின் விதிகள் திருத்தம் செய்யப்பட்டன.

அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவிலில் சிங்க வாகன மண்டபக் கட்டளைக்கு வரி ரூ.100 ஆண்டு தோறும் செலுத்தும் பங்காளிகள் அனைவரும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் என்றும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர், செயலர், பொருளார் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய ஆவணம் எண் 36/2004, 18.2.2014 இல் இராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யபப்பட்டது. அதன்படி திரு. ஏ.ஈஸ்வரமூர்த்தி தலைவர் மற்ற நிர்வாகிகளும் சேர்ந்து பதிவு செய்தனர்.

இந்தத் திருத்திய ஆவணத்தின்படி தான் அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. அருள்மிகு அத்தனூர் அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள கீழ்புறம் உள்ள நிலம், மேல்புறம் உள்ள நிலம் ஆகியவைகள் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்கள் வழங்கிய நன்கொடையாலும் மண்டபக் கட்டண வரியில் செலவு போக மீதியிருந்த தொகையையும் கொண்டு வாங்கப்பட்டவை. மேலும் அருள்மிகு அத்தனூர் அம்மனுக்கு தங்க நகைகள் 76¾ பவுன் மற்றும் வெள்ளி 5 கிலோவும் இராசிபுரம் நாடு விழியன் குல பங்காளிகள் அளித்தவையாகும்.

அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவில் பூசாரிகள் உண்மை தெரிவிக்கமால் மறைத்து பதில் கூறியதால், இராசிபுரம் வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வழக்கு விசாரணையின் பொழுது அம்மன் கோவிலில் நடைபெறும் பூசைகளுக்கு மற்ற இனத்தவர்களும் பூசைக்கு பொருள்கள் கொடுக்கின்றார்கள் என்று பொய் சாட்சி கூறினர். வழக்கு எண் 51/88 இல் சேலம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் வழக்கு நடந்த பொழுது சாட்சி சொல்ல மறுத்து விட்டனர். அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவிலில் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டு வேளாளர்களால் 2.0 இலட்சம் செலவில் 1984 - 86 ஆம் ஆண்டில் கட்டப் பெற்ற பொங்கு மண்டபத்தின் மேல் நிலை தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு 4.0 இலட்சம் செலவில் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்களால் இந்து சமய அறநிலையக் துறையின் அனுமதி செயல் அலுவலர் மூலம் பெறப்பட்டு செய்யப்பட புதிய ஐம்பொன் உற்சவ அம்மன் சிலையை தேரில் வைக்கவோ அல்லது கோயிலைச் சுற்றி எடுத்து வர மற்றவர்களின் எதிர்ப்பால் அனுமதி கிடைக்கவில்லை . ஒரு வருடம் நடைபெற்ற இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்கள் நடத்தும் சிங்க வாகன மண்டபத் கட்டளை நடைபெற்ற நாளில் சிலர் இராசிபுரம் நாடு விழியன் குலக் கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளை என்ற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விளம்பர பலகைய எடுத்து விடவேண்டும் என்று கலகம் செய்தனர். அதைப் பார்த்த மண்டபத்தில் வேலை செய்து வரும் பெண் காவல்துறையினரிடம் புகார் கூறியதன் பேரில் காவல் துறையினர் அங்கு வந்து அவர்களை அப்புறப்படுத்தினார். அதன் பிறகு மண்டபக் கட்டளை அமைதியாக நடைபெற்றது. தேர் திருவிழாவின் பொழுதும், முக்கிய விசேஷ நாட்களிலும் இராசிபுரம் நாடு விழியன் குலப் பெண்மணிகள் தங்கள் குலதெய்வம் அத்தனூர் அம்மனை மன நிம்மதியோடு வழிபடமுடிவதில்லை . 1991 ஆம் வருடம் முதல் அமாவாசையன்று அம்மன் கோவிலில் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டு வேளாளர்களால் நடைபெறும் அன்னதானத்தில் விழியன் குல பங்காளிகள், பெண்கள் ஆகியோர் சாப்பிட முடிவதில்லை.

பட்டா நிலத்தில் புதியதாகக் கோவில் கட்டிக் கொண்டால் அதில் மற்றவர்கள் யாரும் சொந்தமும், உரிமையும் கொண்டாட முடியாது. அரசோ அல்லது இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையோ கோவில் நிர்வாகத்தில் தலையிடாது. இந்திய அரசியல் அடிப்படை ஜீவாதார உரிமைச் சட்டம் (Fundamental Rights) சட்டம் 25 - 26 இன் படி தனி நபர் சொந்தமாகக் கட்டிய கோவில் அல்லது ஒரு சமுதாயம் கட்டிய குலக் கோயிலை அரசு எடுத்துக்கொள்ள முடியாது. பிற்கால சந்ததியினருக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. கோவில் எப்பொழுதும் நம்முடைய நிர்வாகத்தில் இருக்கும் என்ற விளக்கங்களின் படியும் திருத்திய ஆவணத்தில் படி, இராசிபுரம் ஜாகையில் செயல்படும் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டு வேளாளர் அறக்கட்டளையின் நிர்வாகக் கூட்டம் ஏ.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் இராசிபுரம் ஜாகையில் 31.8.2005 அன்று நடைபெற்றது. அதில் புதிய இடத்தில் நிலம் வாங்கி புதிய கோவில் கட்டலாம் என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 29.10.2005 அன்று இராசிபுரம் நாடு விழியன் குல பங்காளிகளின் பொதுக்குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் 90 சதவிகிதம் பங்காளிகளால் புதிய இடத்தில் தங்களுக்கென்று புதிய கோவில் கட்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

புதிய கோவில் கட்டுவதற்குத் திரு. கே. ஏ. செங்கோட்டுவேல் அவர்கள் தலைமையில் புதிய கோவில் கட்டுவதற்கான வேலைகளைச் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. புதிய கோவில் கட்டுவதற்கு குடும்ப வரி, நன்கொடை ஆகியவற்றை எப்படி வசூல் செய்வது என்று ஆலோசிக்க ஊர் பொறுப்பாளர்களின் கூட்டம் இராசிபுரம் ஜாகையில் 12.2.2006 இல் கூட்டம் திரு. கே.ஏ. செங்கோட்டுவேல் தலைமையில் நடைபெற்றது. அதில் ஊர் பொறுப்பாளர்கள் 65 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எல்லா ஊர் பொறுப்பாளர்களும் அனைவரும் (100 சதவிகிதம் ) கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி மறுபடியும் ஊர் பொறுப்பாளர்கள் கூட்டம் 24.3.2006 அன்று இராசிபுரம் ஜாகையில் நடைபெறும் என்று கூறி கூட்டத்தை ஒத்தி வைத்தனர்.

வையப்பமலை அத்தியப்பன், சீயாழி சிதம்பரம், முணுசாவடி தனசேகரன் ஆகியோர் எல்லா ஊர்களின் பொறுப்பாளர்களிடமும் சென்று கையொப்பம் வாங்கி 24.3.2006 அன்று தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 24.3.2006 அன்றும் பாதி ஊர் பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். எந்தக் காரணமும் கூறாமல் திரு. கே.ஏ.செங்கோட்டுவேல் கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டார். 19.4.2008 அன்று இராசிபுரம் ஜாகையில் நடைபெற்ற இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டு வேளாளர்கள் அறக்கட்டளைக்கு 2013 ஆம் ஆண்டு வரை தலைவராக திரு.வி.ஆர்.டி. (எ) டி.எம்.கந்தசாமி அவர்களும் திரு. ஏ.லட்சுமணன் பொருளாளராகவும், திரு. ஏ.அரங்கசாமி செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 5.5.2008 அன்று அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவிலில் ரூபாய் 4,03,234, 76¾ பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி ஆகியவற்றை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறேன் என்று கூறிய திரு ஏ.ஈஸ்வரமூர்த்தி இன்று வரையில் அவைகளை ஒப்படைக்கவில்லை . 1984-1986 இல் 2 லட்சம் செலவில் அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவிலில் இராசிபுரம் நாடு விழியன் குலக் கொங்கு நாட்டுக் கவுண்டர்களால் கட்டப்பட்ட பொங்கு மண்டபத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சேலம் இந்து சமய உதவி ஆணையர் திரு. ஏ.ஈஸ்வரமூர்த்தியின் மேல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் திரு. ஏ.ஈஸ்வரமூர்த்தி நேரில் ஆஜராகி வழக்கை நடத்தாததால் பொங்கு மண்டபம் அத்தனூர் அம்மன் கோவிலுக்குச் சேர்ந்தது என ஒரு தலைபட்சமாக (Exparte) தீர்ப்பு வழங்கப்பட்டது . அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவிலில் கீழ்புறம் உள்ள 4.33 ஏக்கர் நிலம் வாங்கி பல வருடங்கள் ஆகியும் பட்டா மாறுதல் செய்ய இராசிபுரம் வட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்த பின் ஏ.ஈஸ்வர மூர்த்தி தான் அறக்கட்டளையின் நிரந்தர தலைவர் என்று கூறி தன் பெயருக்குப் பட்டா வழங்குமாறு இராசிபுரம் வட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவில் கீழ்புறம் 4.33 ஏக்கர் நிலம் இராசிபுரம் நாடு விழியன்குல நாட்டு வேளாளர் அறக்கட்டளை மூலம் வாங்கப்பட்டது. அதில் 44 செண்ட் நிலம் நான்கு வழி தேசிய சாலைக்காக அரசால் கையகப்படுத்தியதற்கு நஷ்ட ஈடு ரூபாய் 1,33,304/- வங்கி காசோலை (Cheque) வாங்க புதிய நிர்வாகிகள் மூலம் நாமக்கல் நிலம் கையகப்படுத்தும் தாசில்தாரிடம் மனு கொடுத்த பின் நான் தான் அறக்கட்டளையின் நிரந்தரத் தலைவர், என்னிடம் தான் காசோலை தரவேண்டும் என ஈஸ்வரமூர்த்தி மனு கொடுத்ததால் அந்த பணம் வங்கியில் வைப்பு தொகையாக (Deposit) வரவு வைக்கப்பட்டுள்ளது. திரு. கே.ஆர். அத்தியப்ப கவுண்டர், வி.நடன சபாபதி ஆகிய இருவரும் ஏ.ஈஸ்வரமூர்த்தி மற்றும் 26.2.2001 ஆவணத்தில் உள்ள 12 நபர்களையும் திரு. வி.ஆர்.டி (எ) டி.எம். கந்தசாமி அவருடன் 2008 ஆம் வருடம் இராசிபுரம் நாடு விழியன் குல அறக்கட்டளைக்குத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளையும் பிரதி வாதிகளாக சேர்த்து வழக்கு எண் 137/2010 ஐ நாமக்கல் முதன்மை மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் 2001 இல் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் படி 13 நபர்கள் தான் அறக்கட்டளைக்கு நிரந்தர அறங்காவலர்கள், 18.2.2004 இல் பதிவு செய்யப்பட்ட திருத்திய ஆவணம் செல்லாது. 2008 ஆம் ஆண்டு அறக்கட்டளை நிர்வாகத்திற்கு நடந்த தேர்தல் செல்லாது, இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டு வேளாளர் அறக்கட்டளைக்கு நிர்வாக வரைவு திட்டம் (Scheme) அமைக்க வேண்டும் என்று கோரினார்.இந்த வழக்கின் தீர்ப்பில் பரம்பரை உரிமையோ, வாரிசு உரிமையோ கிடையாது. மண்டப கட்டளைக்கு 100 ரூபாய் கொடுத்த அனைவர்க்கும் சம உரிமையுண்டு என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் பழைய கோவில் 19.11.2010 ஆண்டு பாலாலயம் செய்யபட்டு பழைய ஆலயம் முழுவதும் இடிக்கப்பட்டு தரைமட்டமானது. அறநிலையத்துறை ந.க.எண்.52789/2011/Y6/ நாள் 3.11.2011 ல் திருப்பணிக்கு ரூபாய் 58,00,000/-ல் செய்ய உத்தரவு வழங்கி அந்த உத்திரவிலேயே திருப்பணி செய்வதால் எந்தவிதி உரிமையும் கோரக்கூடாது என்று உத்திரவிடப்பட்டது.

14.3.2013 அன்று நடந்த தேர்தலில் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டு வேளாளர் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கு எவரும் போட்டியிடாததால் திரு. வி.ஆர்.டி. (எ) டி.எம். கந்தசாமி தலைவராகவும், திரு. இ.பழனிவேலு செயலாளராகவும், திரு. ஏ.இலட்சுமணன் பொருளாளராகவும் மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி 2018 வரைக்கும் தேர்வு செய்யப்பட்டனர். 30-1-2012 அன்று திரு. வி.ஆர்.டி. (எ) டி.எம். கந்தசாமி தலைமையில் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்கள் நல அறக்கட்டளை ஆவணமானது திரு.அ.வெங்கடாசலம் சேலம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டு இராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண்.31/2012, நாள் 30.1.2012 ஆக பதிவு செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு திரு. வி. ஆர்.டி. (எ) டி.எம். கந்தசாமி தலைவராகவும், திரு. இ. பழனிவேலு செயலாளராகவும், திரு. ஏ. இலட்சுமணன் பொருளாளராகவும் திரு.அ.வெங்கடாசலம் அமைப்புசெயலாளராகவும், திரு.வடிவேலு மற்றும் திரு.லட்சுமணன் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும், திரு.சீயாழி சிதம்பரம் இணைச்செயலாளராகவும், மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் 29.10.2005 ஆம் ஆண்டு இராசிபுரம் ஜாகையில் நடைபெற்ற இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்களின் பங்காளிகள் கூட்டத்தில் தீர்மானித்தபடி இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்களுக்கு புதிய இடத்தில் (பட்டா நிலத்தில்) புதியதாக குலக்கோவில் கட்டுவது என்பதாகும். புதிய கோவில் கட்ட நிலம் தேர்வு செய்து மற்ற பணிகளை துவக்குவதற்கு திரு. வி. ஆர்.டி.(எ) டி.எம். கந்தசாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. முதல் கட்டமாகத் தாலுக்கா வாரியாகப் பல்வேறு ஊர்களில் இராசிபுரம் நாடு விழியன் குல பங்காளிகளின் கலந்தாய்வுக் கூட்டங்கள் திரு.வி. ஆர்.டி (எ) டி.எம். கந்தசாமி தலைமையில் நடைபெற்றன. புதிய கோயிலைச் சீக்கிரம் கட்டவேண்டும் என்று பங்காளிகள் கூறினர். பல்வேறு இன்னல்களுக்கு இடையில் புதிய கோவில் கட்ட நாமக்கல் மாவட்டம். இராசிபுரம் வட்டம். குருக்கபுரம் கிராமம், பாரக்கல்புதூரில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. 24.2.2012 அன்று 2.00 ஏக்கர் நிலம் கிரயம் செய்யப்பட்டது. 5.3.2012 அன்று கணபதி ஹோமம், பூமி பூஜை மற்றும் புதிய கோவில் கட்ட கால்கோள் விழா ஆகியவை நடைபெற்றது. 5.3.2012 அன்று 2.40 ஏக்கர் நிலம் கிரயம் செய்யப்பட்டது. கோவில் முழுவதும் கருக்கல் வேலையாக செய்ய Dr.M. சதாசிவம் ஸ்தபதி அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. புதிய கோவில் 4.40 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுவந்தது. இந்த நிலையில் கோவில் பணிகள் நடைபெறாமல் தோய்வு ஏற்பட்டதின் காரணங்களால் 13.06.2016-ம் தேதியில் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது, அதில் முதல் நிர்வாகக்குழு அனைவரும் ராஜினாமா செய்ய ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே தீர்மானத்தில் அடுத்த நிர்வாகக்குழுவை தேர்தல் முலம் தேர்ந்தெடுக்க 5 நபர்களை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தினசரி நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டு, 10.7.2016 - ம் தேதி A. வெங்கடாசலம் தலைவராகவும், A.மாணிக்கம் (எ) லட்சுமணன் செயலாளராகவும், (ATC) K.பெரியசாமி பொருளாளராகவும், T.V.பாலசுப்ரமணியம் இணைச் செயலாளராகவும், K.தேவராஜு அமைப்புச் செயலாளராகவும், S.குமரவேல் மற்றும் R.இரத்தினசபாபதி துணைத்தலைவராகவும் மேலும் 30 பேர் அறங்காவலர்களாகவும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். உடனே நிர்வாகக்குழு கூடி ஸ்தபதிக்கு முன்பணம் கொடுத்து நின்ற கோவில் கட்டும் பணியை தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் ராஜகோபுரம் பணி துவங்கப்பட்டு 7 நிலையில் இருந்து 9 நிலை ராஜகோபுரமாக கட்டி முடிக்கப்பட்டு முன் மண்டபம் அத்தாயி கோவில் மற்றும் முன் மண்டபம் கருப்பனர் கோவில், முனியப்பன் கோவில் இரண்டு முனி மற்றும் இரண்டு குதிரையும் கட்டப்பட்டு மதில் சுவர் முழுவதும் கருங்கல் வேலையாக கட்டப்பட்டு மதில் சுவருக்கு உள்ளே கருங்கல் முழுவதும் பாவப்பட்டு(lay) வேலைகள் முடிக்கபட்டது. ஆலய மஹா கும்பாபிஷேகம் செய்ய 13.06.2022ம் தேதி நிர்ணயம் செய்யபட்டது. மஹா கும்பாபிஷேகம் தலைவர் A.வெங்கடாசலம், A.மாணிக்கம் (எ) லட்சுமணன், (ATC) K.பெரியசாமி, T.V.பாலசுப்ரமணியம், K.தேவராஜு, S.குமரவேல், R.இரத்தினசபாபதி, அறங்காவலர்கள் மற்றும் பங்காளிகளால் 13.06.2022 -ம் தேதி நிர்ணயித்தபடி செய்து முடிக்கபட்டது.

© Copyrights 2022. Powered by